“தடுப்பூசிக்காக நாம் ஒன்றுபட வேண்டும்”- 11 மாநில முதல்வர்களுக்கு கேரள முதல்வர் கடிதம்

“தடுப்பூசிக்காக நாம் ஒன்றுபட வேண்டும்”- 11 மாநில முதல்வர்களுக்கு கேரள முதல்வர் கடிதம்
“தடுப்பூசிக்காக நாம் ஒன்றுபட வேண்டும்”- 11 மாநில முதல்வர்களுக்கு கேரள முதல்வர் கடிதம்

கொரோனா தடுப்பூசி பிரச்சனையை களைய நாம் எல்லோரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என கடிதம் மூலமாக பாஜக அல்லாத 11 மாநில முதல்வர்களுக்கு தெரிவித்துள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன். மாநிலங்களுக்கு தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக விநியோகிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இதன் மூலம் நாம் வலியுறுத்தலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட், டெல்லி, பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநில முதல்வர்களுக்கு பினராயி விஜயன் கடிதம் எழுதி உள்ளார். 

“கொரோனா தடுப்பூசிய மாநில அரசுகளே தங்கள் சொந்த முயற்சியில் கொள்முதல் செய்து கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டை மத்திய அரசு எடுத்துள்ளது தெளிவாகி உள்ளது. தடுப்பூசிக்கான தேவையுடன் ஒப்பிடும் போது அது கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது. 

இரண்டாவது அலையை நாடு எதிர்கொண்ட வரும் இந்த இக்கட்டான சூழலில் மாநிலங்களுக்கு தேவைப்படும் தடுப்பூசியை வழங்குவது மத்திய அரசின் கடமையாகும். ஆனால் மத்திய அரசு அதிலிருந்து விலக எண்ணுகிறது. நாட்டில் மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் மருத்துவர்கள் கணித்துள்ளனர். அதனை எதிர்கொள்ள நாம் முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டியது அவசியமாக உள்ளது. 

மக்களின் நலன் கருதி அனைவருக்கும் நாட்டில் தடுப்பூசி இலவசமாக கிடைப்பது அவசியமானதாகும். பொருளாதார வேறுபாட்டினால் ஒருவருக்கும் தடுப்பூசி மறுக்கப்படக் கூடாது” என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார் முதல்வர் பினராயி விஜயன். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com