சித்து பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் - நரசிம்ம ராவ்

சித்து பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் - நரசிம்ம ராவ்

சித்து பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் - நரசிம்ம ராவ்
Published on

தமிழ்நாட்டை குறித்து இழிவாக பேசியதற்காக, அமைச்சர் பதவியிலிருந்து நவ்ஜோத் சிங் சித்து விலக வேண்டும் என பாரதிய ஜனதாவின் ஜிவிஎல் நரசிம்ம ராவ் வலியுறுத்தியுள்ளார்.

நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சித்து, தாம் தமிழ்நாட்டிற்கு செல்லும் போது அங்கு மொழி புரிவதில்லை என்று கூறினார். அத்துடன் தம்மால் தினமும் இட்லியை உண்ணமுடியாது எனவும் கூறியிருந்தார். அதுவே பாகிஸ்தான் சென்றால் மொழி ஒன்றேதான் என்றும், அங்கு எல்லாம் அருமையாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாரதிய ஜனதாவின் ஜிவிஎல் நரசிம்ம ராவ், காங்கிரஸ் கட்சியினர் பாகிஸ்தானை நேசிப்பவர்கள் என்று தெரிவித்துள்ளார். அத்துடன் காங்கிரஸை சேர்ந்தவர்கள் பாகிஸ்தான் புகழ்பாடுபவர்கள் என்று தங்களுக்கு தெரியும் எனவும் கூறியுள்ளார். சித்துவின் அந்த பேச்சிற்காக ராகுல் காந்தி ஒவ்வொரு தென்னிந்தியரிடமும் மன்னிப்பு கோரவேண்டும் என்றும், சித்துவை மன்னிப்பு கோர வைக்க வேண்டும் என்றும் கண்டித்துள்ளார். மேலும் சித்து பதவி நீக்கம் செய்யப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com