\
"அரசியலில் இருந்து விலகியே இருப்போம்"- பிபின் ராவத்

"அரசியலில் இருந்து விலகியே இருப்போம்"- பிபின் ராவத்

"அரசியலில் இருந்து விலகியே இருப்போம்"- பிபின் ராவத்
Published on

பாதுகாப்பு படையினர் அரசியலில் இருந்து விலகியே இருப்போம் என முப்படைகளின் தலைமை தளபதியான ஜெனரல் பிபின் ராவத் விளக்கமளித்துள்ளார்.

இந்தியாவில் முதல் முறையாக உருவாக்கப்பட்ட பதவியான, முப்படைகளின் தலைமை தளபதியாக பிபின் ராவத் இன்று பொறுப்பேற்றார். பின்னர், டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவு சின்னத்தில் பிபின் ராவத் மரியாதை செலுத்தினார். அப்போது ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே, விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ராகேஷ்குமார் சிங் பதூரியா மற்றும் கடற்படை தளபதி கரம்பீர் சிங் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவ், முப்படைகளையும் ஒருங்கிணைந்து குழுவாக செயல்பட வைப்பதே இலக்கு என கூறினார். பாதுகாப்பு படையினர் அரசியலில் இருந்து விலகியே இருப்போம் என கூறிய பிபின் ராவத் ஆட்சியில் உள்ளவர்கள் என்ன சொல்கிறார்களோ அதனையே பின்பற்றுவோம் என தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com