“பெட்ரோல் - டீசல் விலை குறைய அடுத்த தேர்தல் வரை காத்திருக்க வேண்டும்” - ஆதித்ய தாக்கரே

“பெட்ரோல் - டீசல் விலை குறைய அடுத்த தேர்தல் வரை காத்திருக்க வேண்டும்” - ஆதித்ய தாக்கரே
“பெட்ரோல் - டீசல் விலை குறைய அடுத்த தேர்தல் வரை காத்திருக்க வேண்டும்” - ஆதித்ய தாக்கரே

மகாராஷ்டிரா சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஆதித்யா தாக்கரே எரிபொருள் விலை குறைய அடுத்த தேர்தல் வரை காத்திருக்க வேண்டும் என்று பாஜக தலைமையிலான மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு நாடு முழுவதும் அன்றாட நிகழ்வாக மாறியுள்ளது. நேற்று வரை பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் வரை உயர்ந்திருந்த நிலையில், இன்று இரண்டு எரிபொருட்களின் விலையும் லிட்டருக்கு தலா 76 காசுகள் அதிகரித்துள்ளது. இதனால், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 107 ரூபாய் 45 காசுகளுக்கும் டீசல் ஒரு லிட்டர் 97 ரூபாய் 52 காசுகளுக்கும் விற்கப்படுகிறது. இதன்மூலம், கடந்த 10 நாட்களில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு லிட்டருக்கு 6 ரூபாயை கடந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையில், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பெட்ரோல் டீசல் விலை உயர்வு பற்றி மகாராஷ்டிரா சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஆதித்யா தாக்கரே பாஜக தலைமையிலான மத்திய அரசை புதன்கிழமை விமர்சித்தார். " 5 மாநில சட்டசபை தேர்தல் முடிந்து தற்போது எரிபொருள் விலை அதிகரித்துள்ளது. விலை குறைய அடுத்த தேர்தல் வரை காத்திருக்க வேண்டும்," என அவர் கூறினார். சிவசேனா எம்பி பிரியங்கா சதுர்வேதி பெட்ரோல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்ததோடு , ஏதாவது ஒரு மாநிலத்திற்கு தேர்தல் அட்டவணையை உடனடியாக அறிவிக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார். பிரதமர் மோடியின் 'மன் கி பாத்' நிகழ்ச்சியை கேலி செய்த ராகுல் காந்தி 'ரோஸ் சுபா கி பாத்' என்று அழைத்தார். “பெட்ரோல்-டீசல்-எரிவாயு விலையை எவ்வளவு உயர்த்த வேண்டும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என்ற வெற்றுக் கனவுகளை எப்படிக் காட்டுவது, எந்த அரசு நிறுவனத்தை இன்று விற்க வேண்டும், விவசாயிகளை மேலும் உதவியற்றவர்களாக மாற்றுவது எப்படி? இவையெல்லாம் பிரதமர் மோடியின் தினசரி செய்ய வேண்டிய பட்டியலில் அடங்கும்” என்று அவர் ட்விட்டரில் எழுதினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com