தலித்துகள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம் ! பிரதமர் மோடி
தலித்துகள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்பதில் தமது அரசு உறுதியாக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, தலித்துகள் மீதான வன்கொடுமை பிரச்னைக்கு தீர்வு காண விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், தலித்துகள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்பதில் தமது அரசு உறுதியாக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கரும்பு விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காண தேவையான நடவடிக்கைகளை தமது அரசு எடுத்து வருவதாக குறிப்பிட்ட அவர், இந்தியாவில் 4 ஆண்டுகளுக்கு முன் 2 செல்ஃபோன் உற்பத்தி ஆலைகள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது மேக் இன் இந்தியா திட்டம் மூலம் அது 120 ஆக அதிகரித்துள்ளதாக பிரதமர் பேசினார். அதேபோல் டெல்லியை சுற்றி அமைக்கப்பட்டுள்ள கிழக்கு சுற்றுவட்டப்பாதையை பிரதமர் மோடி இன்று தொடங்கிவைத்தார். டெல்லியிலிருந்து மீரட்டுக்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையையும் அவர் தொடக்கிவைத்தார்