\
“கொரோனா இரண்டாவது அலையை எதிர்த்து போரிட வேண்டும்!” - பிரதமர் மோடி

“கொரோனா இரண்டாவது அலையை எதிர்த்து போரிட வேண்டும்!” - பிரதமர் மோடி

“கொரோனா இரண்டாவது அலையை எதிர்த்து போரிட வேண்டும்!” - பிரதமர் மோடி
Published on

கொரோனா இரண்டாவது அலையை எதிர்த்து நாம் போராட வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் தடுப்பு குறித்து மாநில முதல்வர்களுடனான ஆலோசனையில் மோடி இதனை தெரிவித்துள்ளார்.

அப்போது மோடி பேசுகையில், “கொரோனா முதல் அலையை கடந்து விட்டோம். தற்போது இரண்டாவது அலையை எதிர்த்து போரிட வேண்டி உள்ளது. இரண்டாவது அலையின் பரவல் முதல் அலையை விட தீவிரமாக உள்ளது. அதனை கருத்தில் கொள்ளாமல் மக்கள் சாதாரணமாக இருப்பது வேதனை தருகிறது” என்றார்.

மேலும், “நாட்டில் மீண்டும் ஒரு சவாலான சூழல் உருவாகி வருகிறது. மகாராஷ்டிரா, பஞ்சாப் மாதிரியான மாநிலங்களில் தொற்றின் பரவல் அதி தீவிரமாக உள்ளது. அதே வேகத்தில் வேறு சில மாநிலங்களுக்கும் தொற்றின் பரவல் இருப்பது கவலை அளிக்கிறது. மேலும் இந்த சவாலை கடக்க அனைவரது ஆலோசனையும் தேவை” என இந்த கூட்டத்தில் மோடி பேசியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com