மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களின் டிஎன்ஏ வேறு; நம்முடையது வேறு: ஆர்எஸ்எஸ்க்கு விஹெச்பி பதிலடி

மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களின் டிஎன்ஏ வேறு; நம்முடையது வேறு: ஆர்எஸ்எஸ்க்கு விஹெச்பி பதிலடி
மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களின் டிஎன்ஏ வேறு; நம்முடையது வேறு: ஆர்எஸ்எஸ்க்கு விஹெச்பி பதிலடி

மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களுடன் தங்கள் டி.என்.ஏவைப் பகிர்ந்து கொள்ள மாட்டோம் என்று வி.எச்.பி தலைவர் சாத்வி பிராச்சி தெரிவித்தார்.

இந்தியர்கள் அனைவரும் ஒரே டிஎன்ஏ வழி வந்தவர்கள் என்று ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) தலைவர் மோகன் பகவத் சமீபத்தில் கருத்து தெரிவித்து இருந்தார்.  “அனைத்து இந்தியர்களும் தங்கள் மதத்தைப் பொருட்படுத்தாமல் ஒரே டி.என்.ஏவைப் பகிர்ந்து கொள்கிறார்கள். கடந்த 40,000 ஆண்டுகளாக அனைத்து இந்தியர்களின் டி.என்.ஏவும் ஒன்றுதான்" என்று அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், அனைத்து இந்தியர்களின் டிஎன்ஏ-வும் ஒன்று தான் என்ற மோகன் பகவத்தின் கருத்துக்கு விஸ்வ இந்து பரிஷத் உறுப்பினர் சாத்வி பிராச்சி கடுமையான பதிலடி கொடுத்திருக்கிறார். "மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களின்" டி.என்.ஏவை இந்துக்களிடையே ஒருபோதும் காண முடியாது என்று சாத்வி பிராச்சி கருத்து தெரிவித்தார்

ராஜஸ்தானின் தவுஸாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய சாத்வி பிராச்சி, “ஒருவேளை இந்திய மக்கள் ஒரே டி.என்.ஏவைப் பகிர்ந்து கொள்ளலாம், ஆனால் பசு இறைச்சி சாப்பிடுவோரின் டி.என்.ஏவை நம்மிடையே ஒருபோதும் காண முடியாதுஎன தெரிவித்தார்

நாட்டில் மக்கள்தொகை கட்டுப்பாடு குறித்து பேசிய அவர், “மக்கள்தொகை கட்டுப்பாடு தொடர்பாக பாராளுமன்றத்தில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும், மேலும் இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு அரசு வசதிகள் நிறுத்தப்பட வேண்டும், அதே போல் வாக்களிக்கும் உரிமையும் பறிக்கப்பட வேண்டும். உங்களுக்கு எத்தனை மனைவிகள் இருந்தாலும் பரவாயில்லை, இரண்டு குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும்," என்று கூறினார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com