'நாம் யாரையும் மதமாற்றம் செய்ய வேண்டியதில்லை' - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

'நாம் யாரையும் மதமாற்றம் செய்ய வேண்டியதில்லை' - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

'நாம் யாரையும் மதமாற்றம் செய்ய வேண்டியதில்லை' - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்
Published on
'இந்தியாவை விஸ்வ குருவாக மாற்றுவதற்கு ஒன்றிணைந்து முன்னேற வேண்டியது அவசியம்' எனத் தெரிவித்துள்ளார் மோகன் பகவத்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், ''நாம் யாரையும் மதமாற்றம் செய்ய வேண்டியதில்லை. எப்படி வாழ வேண்டும் என்பதை கற்றுக்கொடுக்க வேண்டும். உலகம் முழுவதற்கும் இப்படிப்பட்ட பாடத்தை கொடுக்கவே பாரத நாட்டில் பிறந்தோம். நமது மதம் நன்மை செய்கிறது. யாருடைய வழிபாட்டு முறையையும் மாற்றாத குணமுடையவர்களாக இருக்கிறோம். இந்தியாவை விஸ்வ குருவாக மாற்றுவதற்கு ஒருங்கிணைப்புடன் ஒன்றிணைந்து முன்னேற வேண்டியது அவசியம்.
1930ஆம் ஆண்டு முதல் இஸ்லாமிய மக்கள்தொகையை அதிகரிக்க, அவர்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டி இந்த நாட்டை பாகிஸ்தானாக மாற்றும் நோக்கத்துடன் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட முயற்சி நடந்து வருகிறது. இது பஞ்சாப், சிந்து, அஸ்ஸாம் மற்றும் வங்காளத்தில் திட்டமிடப்பட்டது. அது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு வெற்றி பெற்றது, அனைத்து இந்தியர்களின் டிஎன்ஏவும் ஒன்றுதான். மக்கள் எப்படி வழிபடுகிறார்கள் என்பதை வேறுபடுத்திப் பார்க்க முடியாது. இந்தியாவில் இஸ்லாம் ஆபத்தில் உள்ளது என்ற அச்சத்தின் சுழலில் சிக்கிக் கொள்ள வேண்டாம். இந்து-முஸ்லிம் மோதலுக்கான ஒரே தீர்வு உரையாடல் மட்டுமே, கருத்து வேறுபாடு அல்ல. இங்கே ஒன்றுபடுவதற்கு ஒன்றும் இல்லை. ஏனெனில் இங்கு யாரும் வேறுபட்டவர்கள் அல்ல'' என்று அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com