\
தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பு - மத்திய சுகாதாரத்துறை

தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பு - மத்திய சுகாதாரத்துறை

தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பு - மத்திய சுகாதாரத்துறை
Published on

தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் கொரோனா அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர், “தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் கொரோனா அதிகரித்து வருகிறது. இரண்டுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்பு உள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் இடம்பெற்றுள்ளது. மேலும், வடகிழக்கு மாநிலங்கள், கேரளா, மகாராஷ்டிராவில் கொரோனா அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.

கொரோனா அதிகரித்து வரும் மாநிலங்களுடன் மத்திய அரசு தொடர்பில் இருக்கிறது. கொரோனா இரண்டாவது அலையில் இருந்து நாம் இன்னும் மீளவில்லை. எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நாம் தொடர்ந்து எடுக்க வேண்டும். நாட்டில் குணமடைந்தவர்களின் விகிதம் அதிகரித்துள்ளது. தற்போதைய நிலையில் 97.2%ஆக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com