\
 “அரசு கையாள தேவையில்லாத துறைகளை தனியாரிடம் வழங்குகிறோம்” - பிரதமர் மோடி

 “அரசு கையாள தேவையில்லாத துறைகளை தனியாரிடம் வழங்குகிறோம்” - பிரதமர் மோடி

 “அரசு கையாள தேவையில்லாத துறைகளை தனியாரிடம் வழங்குகிறோம்” - பிரதமர் மோடி
Published on: 

அரசு கையாள தேவையில்லாத துறைகள் தனியாரிடம் வழங்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி விளக்கமளித்துள்ளார்.

பிரதமர் மோடி காணொலி வாயிலாக இந்திய விண்வெளி சங்கத்தை தொடங்கி வைத்து விண்வெளித்துறை பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் விண்வெளி துறை மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய அளவில் சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். பொதுத்துறை நிறுவனங்கள் பற்றிய தெளிவான கொள்கையுடன் அரசு முன்னேறிக் கொண்டிருப்பதாக தெரிவித்த பிரதமர், அரசு கையாள தேவையில்லாத பல்வேறு துறைகள் தனியார் துறைக்கு வழங்கப்படுவதாக விளக்கமளித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com