எங்கள் மாநில ஆக்சிஜனை டெல்லிக்கு கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்: ஹரியானா அமைச்சர்

எங்கள் மாநில ஆக்சிஜனை டெல்லிக்கு கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்: ஹரியானா அமைச்சர்
எங்கள் மாநில ஆக்சிஜனை டெல்லிக்கு கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்: ஹரியானா அமைச்சர்

எங்கள் மாநில ஆக்சிஜனை டெல்லிக்கு கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்று ஹரியானா சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்தார்.

இது தொடர்பாக பேசிய ஹரியானா சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் “ எங்கள் மாநிலத்தின் ஆக்சிஜனை டெல்லிக்கு கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். முதலில், நாங்கள் எங்கள் தேவைகளை பூர்த்தி செய்யவேண்டும், பின்னர்தான் மற்றவர்களுக்குக் கொடுப்போம். நேற்று ஃபரிதாபாத்திற்கு சென்று கொண்டிருந்த எங்கள் ஆக்சிஜன் டேங்கர்களில் ஒன்றை டெல்லி அரசு சூறையாடியது. இனி  அனைத்து ஆக்சிஜன் டேங்கர்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்தார்

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், பல இடங்களில் ஆக்சிஜன் சிலிண்டருக்கு பற்றாக்குறை நிலவுவதாக புகார் வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com