தானாக நகர்ந்து வந்து கண்ணாடியை உடைத்து ஷோரூம் உள்ளே நுழைந்த ட்ராக்டர்! அதிரவைத்த காட்சிகள்

தானாக நகர்ந்து வந்து கண்ணாடியை உடைத்து ஷோரூம் உள்ளே நுழைந்த ட்ராக்டர்! அதிரவைத்த காட்சிகள்

தானாக நகர்ந்து வந்து கண்ணாடியை உடைத்து ஷோரூம் உள்ளே நுழைந்த ட்ராக்டர்! அதிரவைத்த காட்சிகள்

உத்தரப்பிரதேசத்தில் தெருவோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ட்ராக்டர் ஒன்று தானாக ஸ்டார்ட் ஆகி, எதிரே இருந்த ஷோரூம் கண்ணாடியை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் கோட்வாலி சிட்டி காவல் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ‘samadhan divas’ நடந்ததை முன்னிட்டு, அப்பகுதியைச் சேர்ந்த சிலர் காவல்நிலையத்திற்கு அருகிலும், பக்கத்திலும் கார்கள் மற்றும் ட்ராக்டர்களை நிறுத்திவிட்டு உள்ளே சென்று விட்டனர். அந்தவகையில், கிஷன் குமார் என்பவர், தனது ட்ராக்டரை ஷு ஷோரூம்-க்கு வெளியே நிறுத்திவிட் காவல் நிலையத்திற்கு சென்றதாகத் தெரிகிறது. சுமார் ஒரு மணிநேரம் அங்கேயே இருந்த ட்ராக்டர் திடீரென தானாக ஸ்டார்ட் ஆகி ஷு ஷோரூமின் கண்ணாடியை உடைத்துக் கொண்டு மெது மெதுவாக உள்ளே நுழைந்தது.

இதனைப் பார்த்து, ஷு ஷோரூம் கேஷ் கவுண்டரில் அமர்ந்திருந்த ஊழியர் ஒருவர் அதிர்ச்சியடைந்து உள்ளேபோய் மற்ற ஊழியர்களை அழைத்து வந்தார். அப்போது தட்டுத்தடுமாறி ஷு ஷோரூம்-க்குள் தானாக நுழைந்த ட்ராக்டரை, ஊழியர் ஒருவர் நிறுத்த முயற்சி செய்தும் முடியாமல் போனது. இதனால் கண்ணாடி கதவுகள் உடைந்து சுக்கு நூறானது. பின்னர் ஒருவழியாக ஊழியர் ஒருவர் ட்ராக்டரின் ப்ரேக் கேபிளை கட் செய்து நிறுத்தினார். இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. தகவல் அறிந்து வந்த பிஜ்னோர் கோட்வாலி சிட்டி காவல் நிலைய போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com