''இவர்களுக்கு எல்லாம் ரூ.10,000 வழங்கப்படும்”-ஜெகன்மோகன் ரெட்டியின் அதிரடி அறிவிப்பு

''இவர்களுக்கு எல்லாம் ரூ.10,000 வழங்கப்படும்”-ஜெகன்மோகன் ரெட்டியின் அதிரடி அறிவிப்பு
''இவர்களுக்கு எல்லாம் ரூ.10,000 வழங்கப்படும்”-ஜெகன்மோகன் ரெட்டியின் அதிரடி அறிவிப்பு

சலவைத் தொழிலாளிகள், சலூன் கடைக்காரர்கள், டெய்லர் ஆகியோருக்கு தலா 10,000 வழங்க ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் தொடங்கிய ஊரடங்கு உத்தரவு இன்று வரை அமலில் உள்ளது. இதனால் பல்வேறு சாமானிய தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

அந்த வகையில் பாதிக்கப்பட்ட தொழிலாளிகளுக்கு நிவாரண நிதியாக மாநில அரசுகள் நிதி உதவி வழங்கி வருகின்றன. இந்நிலையில் ஆந்திராவில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சாமானியர்களுக்கு அம்மாநில முதலமைச்சர் நிதியுதவிகளை அறிவித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக தற்போது இலவச திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார். அதாவது சலவைத் தொழிலாளிகள், சலூன் கடைக்காரர்கள், தையல்காரர்கள் என 2.47 லட்சம் பேருக்கு தலா பத்தாயிரம் வழங்க உத்தரவிட்டுள்ளார். இதற்காக 247 கோடி நிதியை அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஒதுக்கியுள்ளார்.

இதன்மூலம் 82,347 சலவைத் தொழிலாளிகள்,38,767 சலூன் கடைக்காரர்கள், 1,25,926 தையல்காரர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய ஜெகன்மோகன் ரெட்டி, “ இந்த மாநிலத்தில் ஏழைகள் ஒருபோதும் இதுபோன்ற பயனை இதுவரை அடைந்ததில்லை. எனக்கு வாக்களிக்காத நபராக இருந்தாலும் தகுதி உடையவராக இருந்தால் அவர்கள் இந்த பயனை கண்டிப்பாக அடைய முடியும். எந்த ஒரு தகுதியான நபருக்கும் நிதி கிடைக்கும் என்பதை உறுதி செய்வேன்" என தெரிவித்தார். 

இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் பி.எஸ்.சி போஸ், அமைச்சர்கள் பி.ஆர்.ரெட்டி, கே.சங்கரநாராயணா, தலைமைச் செயலாளர் நிலம் சாவ்னி மற்றும் பிற அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com