கோயில்களுக்கு கருவூலத்தில் இருந்து நகைகள் ! சந்திரசேகர் ராவுக்கு சிக்கல்

கோயில்களுக்கு கருவூலத்தில் இருந்து நகைகள் ! சந்திரசேகர் ராவுக்கு சிக்கல்

கோயில்களுக்கு கருவூலத்தில் இருந்து நகைகள் ! சந்திரசேகர் ராவுக்கு சிக்கல்
Published on

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் அரசின் கருவூலத்திலிருந்து மாநிலத்தின் பல கோவில்களுக்கு இலவசமாக தங்க ஆபரணங்களை பரிசாக அளிப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என ஹைதரபாத் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விஜயவாடாவில் உள்ள புகழ்பெற்ற கனக துர்மா கோயிலுக்கு கடந்த மாதம் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், பரிசாக மூக்குத்தி ஒன்றை அளித்தார். இதுமட்டுமில்லாமல் தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றதில் இருந்து பல கோவில்களுக்கு அவர் தங்க ஆபரணங்களை வழங்கியதாக தெரிகிறது.

இந்நிலையில் அரசின் பொதுக் கருவூலத்திலிருந்து இதுபோன்ற விஷயங்களுக்காக பணத்தை பயன்படுத்துவது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த மனுவை தாக்கல் செய்த விஷ்வேஸ்வர் ராவ் கூறும்போது, “ அரசின் எந்த துறை இதற்கான பணத்திற்கு அனுமதி தருகிறது. சட்டத்தின்படி, அரசாங்கம் ரூபாய் 1 லட்சத்திற்கு அதிகமாக செலவு செய்யும்போது ஆணை வெளியிடப்பட வேண்டும். இதுபோன்ற விஷயங்களுக்காக மக்களின் பணத்திலிலிருந்து பல கோடியை ரூபாயை ஒதுக்கீடு செய்ய முதலமைச்சர் உள்பட யாருக்கும் அனுமதி இல்லை. ஆபரணங்கள் தயாரிக்க எந்த ஜூவல்லரியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்து. அதுபோன்ற தகவல்கள் தேவை” என்றார். இதுதொடர்பான வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com