இந்தியா
பெண் நோயாளியிடம் தவறாக நடந்ததாக மருத்துவமனை ஊழியர் கைது!
பெண் நோயாளியிடம் தவறாக நடந்ததாக மருத்துவமனை ஊழியர் கைது!
ஐதராபாத்தில் தனியார் மருத்துவமனையில் பெண் நோயாளிடம் தவறாக நடந்துகொண்டதாக வார்டு பாய் கைது செய்யப் பட்டுள்ளார்.
ஐதராபாத்தை சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் பிரசவத்துக்காக பஞ்சரா ஹில்ஸில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். குழந்தை பிறந்ததும் அந்தப் பெண்ணின் உடல் நிலை மோசமானது. இதனால் வென்டிலேட்டரில் ஒருவாரமாக வைக்கப்பட்டிருக்கிறார். கடந்த வியாழக்கிழமை, அங்கு வந்த வார்டு பாய் அந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
அந்தப் பெண்ணுக்கு உடல் நிலை நேற்று சரியானது. இதையடுத்து, இதுபற்றி தனது கணவரிடம் தெரிவித்தார். அவர் பஞ்சரா ஹில்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, போலீசார் அச்யுத் ராவ் (50) என்ற அந்த வார்டு பாய்-யை கைது செய்தனர்.