\
குழந்தை என்ன பாலினம்..?: மனைவியின் வயிற்றை கிழித்த கொடூர கணவன்

குழந்தை என்ன பாலினம்..?: மனைவியின் வயிற்றை கிழித்த கொடூர கணவன்

குழந்தை என்ன பாலினம்..?: மனைவியின் வயிற்றை கிழித்த கொடூர கணவன்
Published on: 

வயிற்றில் உள்ள குழந்தை என்ன பாலினம் என கண்டுபிடிப்பதற்காக மனைவியின் வயிற்றை கிழித்த கொடூர சம்பவம் உத்தர பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது

உத்தர பிரதேசத்தின் நெக்பூர் பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. ஏற்கெனவே 5 பெண் குழந்தைகளுக்கு தந்தையான பன்னலால் என்பவர், 6வதாக தனக்கு ஆண் குழந்தை வேண்டுமென்று நினைத்துள்ளார். மனைவியும் கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் வயிற்றில் இருப்பது ஆண் குழந்தையா என தெரிந்துகொள்வதற்காக மனைவியின் வயிற்றை கிழித்துள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

கூர்மையான ஆயுதத்தால் கிழித்ததில் 35 வயதான மனைவி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். உடனடியாக கர்ப்பிணியின் குடும்பத்தினர் அவரை விரைவாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ளனர். கர்ப்பிணியின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பன்னலால் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

2020ம் ஆண்டு முடியும் தருவாயில் இருந்தாலும் இன்னமும் பெண் குழந்தைகள் மீதான வெறுப்பு பரவிக்கிடப்பதை இந்த சம்பவம் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்வதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com