‘சுஷாந்த் எங்கள் மகனை போன்றவர்’: சிவசேனா எம்.பி.சஞ்சய் ரவுத்

‘சுஷாந்த் எங்கள் மகனை போன்றவர்’: சிவசேனா எம்.பி.சஞ்சய் ரவுத்

‘சுஷாந்த் எங்கள் மகனை போன்றவர்’: சிவசேனா எம்.பி.சஞ்சய் ரவுத்
Published on

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை விவகாரம், திரையுலகை தாண்டி அரசியல் வட்டாரத்திலும் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது.

சுஷாந்த் சிங்கின் மரண வழக்கு தொடர்பாக, சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் கூறுகையில், ‘’சுஷாந்த் சிங் தனது தந்தையுடன் நல்லுறவைக் கொண்டிருக்கவில்லை. தந்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டது சுஷாந்த் சிங்குக்கு பிடிக்கவில்லை. சுஷாந்த் சிங் கவலையடைய காரணமும் இதுதான் ’’என்று தெரிவித்திருந்தார்.

இக்கருத்துக்கு சுஷாந்த் சிங்கின் குடும்ப உறுப்பினர்கள் ஆட்சேபனை எழுப்பியதோடு சஞ்சய் ராவத்தை மன்னிப்புக் கேட்குமாறும் கூறிவந்தனர்.

இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து மீண்டும் விளக்கமளித்துள்ள சஞ்சய் ராவத், ''சுஷாந்தின் குடும்பத்தினர் உட்பட அனைவரும் சற்று அமைதி காக்க வேண்டும். எங்களுக்கும் சுஷாந்துக்கும் என்ன பகை இருக்கிறது? எதுவுமில்லை.

பாலிவுட் மும்பையின் குடும்பம். சுஷாந்த் எங்கள் மகனை போன்றவர். அவரது குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அவரது மரணத்தின் பின்னணியில் உள்ள ரகசியம் வெளியே வர வேண்டும்'' என்று ரவுத் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com