\
voyager
voyagerநாசா

மனிதனின் பேராற்றலை பறைசாற்றும் அறிவியல் அற்புதம்.. விண்வெளி உலகில் இந்தியா நிகழ்த்திய அற்புதம்

அமெரிக்காவின் வாயேஜர் விண்கலம் பூமியிலிருந்து பயணிக்கத் தொடங்கி ஒரு ஒளி நாளை அதாவது 2 ஆயிரத்து 590 கோடி கிலோ மீட்டர் தூரத்தை நிறைவு செய்தது.
Published on: 

அமெரிக்காவின் வாயேஜர் விண்கலம் பூமியிலிருந்து பயணிக்கத் தொடங்கி ஒரு ஒளி நாளை அதாவது 2 ஆயிரத்து 590 கோடி கிலோ மீட்டர் தூரத்தை நிறைவு செய்தது. விண்வெளி அறிவியலின் உச்சகட்டச் சாதனை குறித்து தற்போது பார்க்கலாம்.

voyager
voyagerநாசா

ஒரு வாகனத்தின் பயணம் என்பது சில நிமிடங்கள்.. சில மணி நேரங்கள்... சில நாட்களாக இருக்கலாம்... சில வாரங்கள் கூட இருக்கலாம். ஆனால் வாயேஜர் ஒன் விண்கலத்தின் பயணம் 49 ஆண்டுகளைக் கடந்து தொடர்ந்து வருகிறது. 1977இல் பூமியில் இருந்து புறப்பட்டு பிரபஞ்சப் பெருவெளியில் மேலேமேலே பறந்து கொண்டே இருக்கும் இப்பயணம் ஒரு ஒளி நாளை நிறைவு செய்ய . ஒளியானது விண்வெளியில் ஒரு வினாடிக்கு சுமார் 3 லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கக்கூடியது. இந்த அதீத வேகத்தில் ஒளி தொடர்ந்து 24 மணி நேரம் பயணம் செய்தால் எவ்வளவு தூரத்தைக் கடக்குமோ, அதுவே ஒரு ஒளி நாள். மணிக்கு 61 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் தற்போதுவரை 2 ஆயிரத்து 590 கோடி கிலோ மீட்டர் சென்றுள்ளது வாயேஜர் ஒன்.

நாசாவால் 1977 செப்டம்பர் 5-ம் தேதி வாயேஜர் 1 விண்ணில் செலுத்தப்பட்டது. வியாழன் மற்றும் சனி ஆகிய கோள்களை மிக அருகில் சென்று ஆராய்வதற்காக 5 ஆண்டு திட்டமாகவே இது ஏவப்பட்டது. ஆனால், தனது ஆரம்பக்கட்டப் பணிகளை வெற்றிகரமாக முடித்த பிறகும் இதன் பயணம் நிற்கவில்லை. நமது சூரிய குடும்பத்தின் எல்லைகளைத் தாண்டி, 2012-ம் ஆண்டில் இன்டர்ஸ்டெல்லர் ஸ்பேஸ் அதாவது நட்சத்திரங்களுக்கு இடையிலான விண்வெளி பகுதிக்குள் இது நுழைந்தது. அண்டசராசரங்கள் குறித்த அறிய தரவுகளை அள்ளிஅளித்தந்து பயணித்துக்கொண்டே இருக்கிறது இந்த அறிவியல் அதிசயம்.

voyager
voyagerநாசா

விண்வெளியின் உறைய வைக்கும் குளிர், கடுமையான கதிர்வீச்சு என அரை நூற்றாண்டாக அனைத்தையும் தாங்கிக்கொண்டு இந்த விண்கலம் இன்றும் தொடர்ந்து செயல்பட்டு வருவது ஒரு மாபெரும் பொறியியல் அற்புதம். சூரிய ஒளியே இல்லாத பேரிருளில், தன்னுள் உள்ள புளூட்டோனியம் அணுக்கரு மின்கலன்கள் மூலமே தனக்கான ஆற்றலை பெறுகிறது வாயேஜர் ஒன். இதிலுள்ள மின்கலன்கள் படிப்படியாகத் சக்தியை இழந்தாலும், விஞ்ஞானிகள் அதன் ஆயுளைத் திறமையாக நீட்டித்து வருகின்றனர்.

வாயேஜர் 1 விண்கலத்திற்குள் தங்கத் தட்டு ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில் பூமியின் ஒலிக்குறிப்புகள், கடலலைகளின் ஒலிக்குறிப்புகள், விலங்குகளின் ஒலிகள், 55 வெவ்வேறு மொழிகளில் வாழ்த்துக்கள், மனிதர்களின் மரபணு அமைப்பு மற்றும் நமது சூரிய குடும்பத்தின் வரைபடம் ஆகியவை பொறிக்கப்பட்டுள்ளன. பல லட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு, பிரபஞ்சத்தில் வேறு ஏதேனும் வேற்றுகிரக உயிரினங்கள் இந்த விண்கலத்தைக் கண்டால், பூமி குறித்து அறிந்துகொள்ளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

பரந்து விரிந்த எல்லையற்ற இம்மாபெரும் பிரபஞ்சத்தில் மனிதன் மிகவும் சின்னஞ்சிறியவன். ஆனால் அவனது அறிவும் தேடலும் ஆற்றலும் எல்லையற்றது என்பதற்கு வாயேஜர் 1 விண்கலம் ஒரு வாழும் சாட்சி.