மிசோரம், சத்தீஸ்கரில் வாக்குப்பதிவு தொடங்கியது

40 தொகுதிகளை கொண்ட மிசோரம் மாநில சட்டமன்றத்திற்கு வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
மிசோரம், சத்தீஸ்கர்
மிசோரம், சத்தீஸ்கர்புதிய தலைமுறை

40 தொகுதிகளை கொண்ட மிசோரம் மாநில சட்டமன்றத்திற்கு வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்குகிறது. தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் 1,276 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சுமார் 50 கம்பெனிகளை சேர்ந்த மத்திய ஆயுதப்படை வீரர்கள் பாதுகாப்பு பணிகளுக்காக குவிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் 30 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. இத்தேர்தலில், மிசோ நேஷனல் பிரன்ட் கட்சி, ஜோரம் பீப்பிள் மூவ்மெண்ட் கட்சி  மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனைப்போட்டி நிலவுகிறது.

மிசோரம், சத்தீஸ்கர்
மிசோரம், சத்தீஸ்கர்முகநூல்

பாஜக சார்பில் 23 வேட்பாளர்களும், ஆம் ஆத்மி சார்பில் 4 பேரும் களத்தில் உள்ளனர். மொத்தம் 174 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். இதேபோல், 90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவையில், முதற்கட்டமாக 20 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நக்சல்கள் பாதிப்பு உள்ள வாக்குச்சாவடி மையங்களில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

மிசோரம், சத்தீஸ்கர்
சத்தீஸ்கரில் முதற்கட்டமாக 20 தொகுதிகளில் வாக்குப்பதிவு: பலத்த பாதுகாப்பு

அங்கு மாலை 3 மணி வரையிலும் மற்ற எட்டு தொகுதிகளுக்கு காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 20 தொகுதிகளில் 5,304 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 40 ஆயிரம் மத்திய ஆயுத காவல் படையினர் மற்றும் இருபதாயிரம் மாநில காவல்துறையினர் என மொத்தமாக 60 ஆயிரம் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com