உத்தரப் பிரதேசத்தில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நிறைவு - மார்ச் 10ல் தேர்தல் முடிவுகள்

உத்தரப் பிரதேசத்தில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நிறைவு - மார்ச் 10ல் தேர்தல் முடிவுகள்
உத்தரப் பிரதேசத்தில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நிறைவு - மார்ச் 10ல் தேர்தல் முடிவுகள்

உத்தரப் பிரதேசத்தில் 7 ஆவது மற்றும் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு இன்றுடன் நிறைவடைந்தது.

உத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் இறுதிக்கட்ட தேர்தல் வாரணாசி, அசம்கர்க், மாவ், ஜான்பூர், காஸிபூர் சந்தவுளி, மிர்ஸாபூர், படோஹி உள்ளிட்ட மாவட்டங்களில் இருக்கும் 54 தொகுதிகளுக்கு இன்று நடைபெற்று முடிந்தது. வாக்குப்பதிவு நடைபெற்ற 54 தொகுதிகளில் 11 தொகுதிகள் பட்டியலினத்தவர்களுக்கும், இரு தொகுதிகள் பழங்குடியின மக்களுக்காகவும் ஒதுக்கப்பட்டிருந்தன. 2 கோடிக்கும் மேற்பட்டோர் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தார்கள். காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த வாக்குப்பதிவு, மாலை 6 மணிவரை விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் 54.8 சதவீத வாக்குகள் பதிவாகின. வரும் 10 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகவுள்ளன.

உத்தரபிரதேச தேர்தலை பொறுத்தவரை, நான்குமுனைப் போட்டி நிலவகிறது. ஆளும் பாஜக, பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்தனியாக தேர்தலை சந்தித்துள்ளன. இருந்தபோதிலும், பாஜகவுக்கும், சமாஜ்வாதிக்கும் இடையேதான் நேரடிப் போட்டி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com