ஆறாம் கட்ட மக்களவைத் தேர்தல்|வாக்கு சதவீதம் இவ்வுளவு தானா?

ஆறாம் கட்ட மக்களவைத் தேர்தலில் 61.20 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆறாம் கட்ட மக்களவைத் தேர்தல்
ஆறாம் கட்ட மக்களவைத் தேர்தல்முகநூல்

ஆறாம் கட்ட மக்களவைத் தேர்தலில் 61.20 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் ஆறாம் கட்டமாக டெல்லி, உத்தர பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட 7 மாநிலங்களில் உள்ள 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. பொதுவாக வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது. இரவு 11.45 மணி நிலவரப்படி, 61.20 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.

டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் 57.67 விழுக்காடு வாக்குகளும், உத்தர பிரதேசத்தில் 54.03 விழுக்காடும், ஹரியானாவில் 64.04 விழுக்காடு வாக்குகளும் பதிவாகி உள்ளன. பீகாரில் 55.24, மேற்குவங்கத்தில் 79.47, ஒடிசாவில் 69.56, ஜார்க்கண்ட் மாநிலத்தில் 63.76, ஜம்மு-காஷ்மீரில் 54.30 விழுக்காடு வாக்குகளும் பதிவாகியுள்ளன.

ஆறாம் கட்ட மக்களவைத் தேர்தல்
அதானி நிலக்கரி இறக்குமதி ஊழல்| ’விரைவாக விசாரணை தேவை’.. SC நீதிபதிக்கு 21 அமைப்புகள் கடிதம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com