குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.
182 சட்டசபை உறுப்பினர்களை கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு டிசம்பர் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தமாக 68.41 சதவீத வாக்குகள் பதிவாகின. இதேபோல் 68 உறுப்பினர்களை கொண்ட இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைக்கு கடந்த நவம்பர் மாதம் 9-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 75.28 சதவீத வாக்குகள் பதிவாகின.
இரண்டு தேர்தல்களிலும் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. குஜராத்தில் 37 மையங்களிலும், இமாச்சலப் பிரதேசத்தில் 42 மையங்களிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுளள்து. ஒவ்வொரு வாக்கு மையத்திலும் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 11 மணிக்குள் முன்னணி நிலவரம் தெரியவரும். முழுமையான முடிவுகள் அனைத்தும் மாலை 5 மணிக்குள் தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.