\
டெல்லியில் புறப்பட்ட சில நிமிடங்களில் தரையிறங்கிய விமானம் - என்ன காரணம்?

டெல்லியில் புறப்பட்ட சில நிமிடங்களில் தரையிறங்கிய விமானம் - என்ன காரணம்?

டெல்லியில் புறப்பட்ட சில நிமிடங்களில் தரையிறங்கிய விமானம் - என்ன காரணம்?
Published on

டெல்லியிலிருந்து புறப்பட்ட விமானம் சில நிமிடங்களிலேயே தரையிறக்கப்பட்டது. நல்வாய்ப்பாக பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

விஸ்தரா uk-697 என்ற விமானம் இன்று காலை டெல்லி விமான நிலையத்திலிருந்து அமிர்தசரஸ்  புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலே, தொழில்நுட்ப கோளாறு கண்டறியபட்ட நிலையில், விமானத்தை அவசர, அவசரமாக தரையிறக்கிய பைலட், உடனடியாக விமான நிலைய அதிகாரிகளை தொடர்புகொண்டு பிரச்னையை தெரிவித்தார்.

இதையடுத்து, மாற்று விமானத்தின் மூலம் பயணிகள் அமிர்தரஸூக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அமிர்தசரஸ் நோக்கி புறப்பட்ட விமானத்தில் 146 பயணிகள் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com