வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு விசா கட்டுப்பாடுகள் தளர்வு

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு விசா கட்டுப்பாடுகள் தளர்வு

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு விசா கட்டுப்பாடுகள் தளர்வு
Published on

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாழ்நாள் முழுவதும் விசா அளிக்க உதவும் OCI எனப்படும் overseas citizenship of india என்ற அடையாள அட்டைக்கு பயண கட்டுப்பாடுகளை உள்துறை அமைச்சகம் தளர்த்தியுள்ளது.

OCI அட்டை வைத்திருக்கும் வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் 20 வயதுக்குட்பட்டிருந்தாலோ 50 வயதுக்கும் மேற்பட்டிருந்தாலோ ஒவ்வொரு முறையும் இந்தியா வரும் போது பாஸ்போட்டை புதுப்பிக்கவும் மறுபதிவு செய்வதும் கட்டாயமாக இருந்து வந்தது. இந்த கட்டுப்பாடு கட்டாயமில்லை என உள்துறை அமைச்சகம் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

வரும் ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை இந்த கட்டுப்பாடு தளர்வு அமலில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. அதே வேளையில், தங்களின் பயணத்தின்போது பழைய பாஸ்போர்டுகளை வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் கையில் வைத்திருக்க வேண்டும் என்றும் அறவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com