‘கல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்’ வீரர்களின் குழந்தைகளுக்கு உதவும் சேவாக்

‘கல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்’ வீரர்களின் குழந்தைகளுக்கு உதவும் சேவாக்

‘கல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்’ வீரர்களின் குழந்தைகளுக்கு உதவும் சேவாக்
Published on

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குழந்தைகளின் கல்விக்கு உதவ இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் முன்வந்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் நேற்று முன் தினம் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் வீர மரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெயிஷ்-இ-முகமது அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த கொடூர தாக்குதலுக்கு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றன. உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் இழப்பீட்டு தொகை வழங்கி வருகின்றன. 

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், வீரமரணம் அடைந்த 40 வீரர்களின் குழந்தைகளின் முழு கல்விச் செலவையும் தானே ஏற்பதாகவும் அவர்களை தான் நடத்தி வரும் சர்வதேச சேவாக் பள்ளியில் படிக்க வைப்பதாகவும் ட்விட்டரில் அறிவித்துள்ளார். மேலும் வீரமரணம் அடைந்த இந்த வீரர்களுக்கு நாம் எது செய்தாலும் அது போதுமானதாக இருக்காது என குறிப்பிட்டு வீர மரணம் அடைந்த வீரர்களின் புகைப்படங்கள், அவர்களின் பெயர் பட்டியலையும் சேவாக் வெளியிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com