அரிசி திருடியதற்காக இளைஞர்களால் அடித்துக்கொல்லப்பட்ட கேரள இளைஞர் மதுவின் குடும்பத்திற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் நிதியுதவி அளித்துள்ளார்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி பகுதியில் வசித்து வந்த மனநலம் பாதிக்கப்பட்ட பழங்குடியின இளைஞர் மது. அரிசி திருடியதாகக் கூறி அண்மையில் அப்பகுதி இளைஞர்களால் அடித்துக் கொல்லப்பட்டார். இளைஞர்கள் ஒன்றிணைந்து மதுவை தாக்கும் வீடியோ காட்சிகள் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அப்போது வைரலானது. இது மனித உரிமை மீறல் சம்பவம் எனக் கூறி நாடு முழுவதும் பல்வேறு தரப்பிலிருந்து கண்டனக்குரல்கள் எழுந்தன.
இந்நிலையில் அரிசி திருடியதற்காக இளைஞர்களால் அடித்துக்கொல்லப்பட்ட கேரள இளைஞர் மதுவின் குடும்பத்திற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் நிதியுதவி அளித்துள்ளார். ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள காசோலையை, கொல்லப்பட்ட மதுவின் தாயாரான மல்லி பெயருக்கு வீரேந்திர சேவாக் வழங்கியுள்ளார்.