இந்தியா
மாரியப்பன், விராத் கோலி உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள்
மாரியப்பன், விராத் கோலி உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள்
தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோலி உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விழாவில் பத்ம விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு சான்றிதழ்களையும், பதக்கங்களையும் பிரணாப் முகர்ஜி வழங்கிச் சிறப்பித்தார். பிரபல பாடகர் கே.ஜே. யேசுதாஸ், தமிழகத்தைச் சேர்ந்த சத்குரு ஜக்கி வாசுதேவ், தமிழகத்தைச் சேர்ந்த பாராலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலு உள்ளிட்டோர் விருதுகளைப் பெற்றனர்.