\
Virat Kohli Breaks Silence On Claims He Took Rs 5 Crore
Virat KohliPTI

ஆசிரமத்துக்குச் செல்ல ரூ.5 கோடி.. பணம் வாங்கினாரா விராட் கோலி?

‘தினேஷ் சர்மா கூறிய குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை, ஆதாரமற்றவை மற்றும் தவறானவை என அறிக்கை வாயிலாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Published on: 
Summary

பிரேமானந்த் மகாராஜின் ஆசிரமத்திற்குச் செல்ல விராட் கோலி 5 கோடி ரூபாய் பெற்றதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டு விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து அவர் விளக்கம் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோர் ஆன்மீக இடங்களுக்கு அடிக்கடி பயணம் மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில், 'ஸ்ரீ கிருஷ்ண ஜன்மபூமி சங்கர்ஷ் நியாஸ்' அமைப்பின் தலைவரான பலாஹாரி மகாராஜ் தினேஷ் சர்மா என்பவர், பிருந்தாவனத்தில் உள்ள பிரேமானந்த் மகாராஜின் ஆசிரமத்திற்கு விராட் கோலியை வரவழைக்கவும், ஆசிரமத்தின் புகழை உயர்த்தவும் ரூ. 5 கோடி செலவிடப்பட்டதாகக் குற்றச்சாட்டு ஒன்றை எழுப்பியிருந்தார். இதற்கு விராட் கோலி தரப்பு மறுத்து தெரிவித்துள்ளது. ‘தினேஷ் சர்மா கூறிய குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை, ஆதாரமற்றவை மற்றும் தவறானவை என அறிக்கை வாயிலாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

virat kohli
virat kohliPTI

விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோர் பிரேமானந்த் மகாராஜ் மீது கொண்டுள்ள ஆழ்ந்த தனிப்பட்ட நம்பிக்கை, மரியாதை மற்றும் ஆன்மிக ஈர்ப்பு காரணமாக மட்டுமே ஆசிரமத்திற்குச் சென்று அவரைச் சந்திக்கின்றனர். இதற்காக எந்தவொரு பணப் பரிவர்த்தனையும் நடைபெறவில்லை. சரிபார்க்கப்படாத இத்தகைய வதந்திகளையும் பொய்ப் பிரசாரங்களையும் ஊடகங்களும் சமூக வலைதளப் பயனர்களும் பரப்ப வேண்டாம்’ என விராட் கோலியின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com