போர்வாளின் கூர்மையை சோதிக்கும் புதுச்சேரி அமைச்சர் சந்திரபிரியங்கா.. வைரலாகும் வீடியோ

போர் வாளின் கூர்மையை பரிசோதித்த புதுச்சேரி பெண் அமைச்சரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
Chandira Priyanga
Chandira PriyangaPT (file picture)

புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திரப்பிரியங்கா. புதுச்சேரி சட்டப்பேரவையில் அங்கம் வகிக்கும் ஒரே பெண் என்ற அந்தஸ்த்தை பெற்ற இவர், காரைக்கால் நெடுங்காடு சட்டமன்ற தொகுதியை சேர்ந்தவர் ஆவார்.

அமைச்சர் சந்திரப்பிரியங்கா தொடர்பான வீடியோக்கள் சில அவ்வவ்போது வைரலாகி வருகிறது. தற்போது அலுவலக அறையில் கையில் இருந்த போர்வாளை அதன் உறையில் இருந்து உருவி அதன் கூர்மையை பரிசோதிக்கும் வீடியோ சமூக வளைதளங்களில் அவர்களின் தொண்டர்களால் பரப்பப்பட்டு வைரலாகி வருகின்றது.

அது தொண்டர்கள் பரிசளித்த போர்வாள் என்று கூறப்படுகிறது. போர்வாளின் கூர்மையை பெண் அமைச்சர் பரிசோதிக்கும் வீடியோ காரைக்கால் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வய்ந்ததாக பேசப்படுகின்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com