டயரில் வித்தை காட்டிய விஞ்ஞானி சிறுவன் - வைரல் வீடியோ

டயரில் வித்தை காட்டிய விஞ்ஞானி சிறுவன் - வைரல் வீடியோ

டயரில் வித்தை காட்டிய விஞ்ஞானி சிறுவன் - வைரல் வீடியோ
Published on

மகேந்திரா நிறுவனத்தின் நிர்வாக தலைவர் ஆனந்த் மகேந்திரா '#WhatsAppwonderbox' என்ற ஹேஸ்டேக்கின் மூலம் அவ்வவ்போது சுவாரஸ்யமான பதிவுகளை செய்வார். அந்த வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில்  வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், சிறுவர்கள் ஒரு தெரு ஒன்றில் பழைய கார் டயரை கொண்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். 

அதில், ஒரு சிறுவன், சின்னஞ்சிறிய அந்த டயரில் தன்னுடைய உடலை முழுவதுமாக நுழைக்கிறான். எவ்வித பிடிமானமும் இல்லாமல் அவன் அந்த டயருடன் உருண்டான். நீண்ட தெருவில் அந்த டயர் உருண்டு செல்கிறது. குறிப்பிட்ட தூரம் சென்ற பின்னர் தனது கால்களால் அந்த டயரை ஓட்டி திரும்பி வருகிறான் அந்த சிறுவன். பார்ப்பதற்கு மிகவும் அற்புதமாக இருக்கிறது அந்த வீடியோ.

ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ பகிரப்பட்டு வந்ததுதான். ஆனால், ஆனந்த் மகேந்திரா அந்த வீடியோவை பகிர்ந்ததற்கு பின் பலரது கவனத்திற்கும் சென்றுள்ளது. ஆனந்த் மகேந்திராவின் இந்த வீடியோ பதிவை 12,800 பேர் லைக் செய்துள்ளார்கள். 2,900 பேர் ரீட்வீட் செய்துள்ளார்கள். பலரும் அந்த வீடியோ தங்களை உற்சாக மூட்டியதாக கருத்து தெரிவித்தார்கள்.

இந்த வீடியோவை பதிவிட்டு, தன்னுடைய சக ஊழியர்களுக்கு ஒரு செய்தியும் கூறியுள்ளார். அதில், “மகேந்திரா ஆட்டோமோட்டிவில் உள்ள என்னுடைய சக பணியாளர்களுக்கு: பறக்கும் கார்கள், ஸ்பேஸ்ஷிப் போன்றவற்றில் இருந்து தான் நம்முடைய வேலைக்கான ஆவல் பிறக்கிறது. ஆனால், குழந்தைகளால் விரும்பக் கூடியதாகவும் நம்முடைய பணிகள் இருப்பதை விட்டுக் விடக் கூடாது. தங்களுடைய சந்தோஷமான தருணங்களுக்காக எப்படியெல்லாம் சிறுவர்கள் புது வழிகளை கண்டுபிடிக்கிறார்கள் என்பதையும் பார்க்கவேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com