பாப் பாடகர் போல ஆங்கில பாடல்களை பாடி அசத்தும் விவசாயி

பாப் பாடகர் போல ஆங்கில பாடல்களை பாடி அசத்தும் விவசாயி
பாப் பாடகர் போல ஆங்கில பாடல்களை பாடி அசத்தும் விவசாயி

பிரபல பாப் பாடகர் போல விவசாயி ஒருவர் ஆங்கில பாடல்களை பாடும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளத்தில் மிக வேகமாக பரவி வருகிறது.

பல்வேறு சமூக ஊடகங்கள் வந்துவிட்ட இந்தக் காலத்தில் பொழுது போக்கு அம்சங்களுக்குப் பஞ்சமே இல்லை. இந்தத் தளங்கள் வந்த பிற்பாடு பல்வேறு திறமையாளர்கள் வெளி உலகத்திற்கு மிக எளிதாக தெரிய ஆரம்பித்துள்ளனர். அதன் மூலம் சரியான திறமைகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கான அங்கீகாரம் மிக எளிதாக வந்து சேர்கிறது. அதற்கு சரியான உதாரணம் மாற்றுத்திறனாளியான திருமூர்த்தி. அவர் சமூக ஊடகங்களில் பாடிய பாடல் ஒன்று வெளியாகி அவருக்கு இசையமைப்பாளர் இமான் திரைப்படத்தில் பாடும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது. 

அதே போல ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் பிரபல பாப் பாடகரான ஜஸ்டின் பீபரின்‌ பாடலை நேர்த்தியாக பாடுகிறார். அதற்கான வீடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. கனடாவை சேர்ந்த ஜஸ்டின்‌ பீபரின் ஆல்பங்களுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவரைப் போலவே ஆங்கில பாப் பாடல்களை இந்த விவசாயி பாடுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் கர்நாடக மாநிலத்தில் வசித்து வரும் பிரதீப் என்பது தெரியவந்துள்ளது. 

சித்ரதுர்காவை அடுத்துள்ள ‌ஹிரியூர் பகுதியை சேர்ந்த 26 வயதான பிரதீப், விவசாயம் செய்து வருகிறார். இவர் ஜஸ்டின் பீபரின் பேபி பாடலை வரி பிசகாமல் நேர்த்தியான கு‌ரலில் பாடி அசத்தியிருக்கிறார். அசல் பதிப்பைப் போலவே பிரதீப்பின் குரல் இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com