\
ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண்... நொடிப்பொழுதில் காப்பாற்றிய சக பயணிகள்

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண்... நொடிப்பொழுதில் காப்பாற்றிய சக பயணிகள்

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண்... நொடிப்பொழுதில் காப்பாற்றிய சக பயணிகள்
Published on

மும்பையில் ஓடும் ரயிலில் தொங்கியபடி பயணித்ததால் கீழே விழுந்த இளம்பெண்ணை சக பயணிகள் நொடிப்பொழுதில் காப்பாற்றினர்.

மும்பையில் மின்சார ரயிலில் படிக்கட்டில் உள்ள தடுப்புக்கம்பியை பிடித்து தொங்கியபடி 17 வயது பெண் ஒருவர் பயணித்துள்ளார். அப்போது திடீரென நிலைதடுமாறிய அவர், ரயிலில் இருந்து கீழே விழுந்தார். இதைப் பார்த்த சக பயணிகள், தடுப்புக் கம்பியின் அடிப்பகுதியை பற்றியவாறு இருந்த அப்பெண்ணை நொடிப்பொழுதில் பாதுகாப்பாக மீட்டனர். இளம்பெண் ரயிலில் இருந்து விழுந்த நேரத்தில் அருகில் இருந்த மற்றொரு தண்டவாளத்தில் மற்றொரு மின்சார ரயில் வேகமாக செல்கிறது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதுகுறித்து அப்பெண் கூறும்போது, “ ஒரு கையால் ரயிலில் பிடித்திருந்தேன். செல்போனிலும் பேசிக்கொண்டிருந்தேன். அருகில் உள்ள தண்டவளாத்தில் வேகமாக ரயில் சென்றதால் நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டேன். என்ன நடந்தது என்றே தெரியவில்லை.  நல்லவேளையாக என்னை அருகில் இருந்தவர்கள் காப்பாற்றிவிட்டனர்” என தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com