\
Viral AI video of Pasupathy dancing with Arundhati takes over the web
ARUNTHATHIINSTA

கந்தர்வ கோட்டை சமஸ்தானமே!! அருந்ததியுடன் ஆட்டம் போட்ட பசுபதி.. இணையத்தை கலக்கும் AI வீடியோ!

திரையில் நம்மை மிரட்டி, எதிரும் புதிருமாக இருந்த கதாபாத்திரங்கள் இன்று ஒரே பாடலுக்கு இணைந்து ஆட்டம் போட்டால் எப்படி இருக்கும்?...அதுபோன்ற வீடியோ தான் தற்போது வெளியாகிவைரலாகி வருகிறது.
Published on: 

செய்தியாளர் - ராஜ்குமார்.ர

‘அருந்ததி’ என்ற சொல்லைக் கேட்டாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது, 2009-ஆம் ஆண்டு அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்தான். திரைப்படம் வெளியான காலகட்டத்தில் சிறுவர்களின் தூக்கத்தைக் கெடுத்த படம் என்றே இதைக் கூறலாம். இந்திய சினிமாவில் பெண் கதாபாத்திரத்தை முதன்மையாகக் கொண்டு வெளியான திரைப்படங்கள் வெற்றி பெறுமா என்ற கேள்வி நிலவிய காலகட்டத்தில், கதாநாயகியை மையமாகக் கொண்டு வெளியான ‘அருந்ததி’ விமர்சன ரீதியாக மட்டுமின்றி, வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது.

anushka shetty
anushka shettyAni

இந்தத் திரைப்படத்தில் அருந்ததி கதாபாத்திரம் மட்டுமின்றி, வில்லனாக நடித்த சோனு சூட்டின் பசுபதி கதாபாத்திரமும் பெரும் வரவேற்பைப் பெற்றது. திரையில் அருந்ததிக்கும் பசுபதிக்கும் இடையே எதிரும் புதிருமான கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கும். உயிரிழந்த பிறகும் அமானுஷ்ய சக்தியுடன் அருந்ததியைப் பழிவாங்கத் துடிக்கும் பசுபதியை, அருந்ததி மீண்டும் அழிப்பதே இந்தக் கதையின் மையக்கருவாகும்.

திரைப்படம் வெளியாகி பல ஆண்டுகள் ஆனாலும், இன்றளவும் இந்தப் படத்தைப் பார்த்துப் பயப்படாத சிறுவர்கள் இருக்க முடியாது என்ற அளவுக்கு அதன் காட்சிகளும் கதாபாத்திரங்களும் ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தின.

அப்படிப்பட்ட திரைப்படத்தின் கதாபாத்திரங்களான அருந்ததியும் பசுபதியும் தற்போது சாய் அபயங்கர் இசையில் வெளியாகி இளம் தலைமுறையினரினிடையே ட்ரெண்ட் ஆன ‘பவளமல்லி’ பாடலுக்கு இணைந்து டான்ஸ் ஆடுவது போன்ற வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

sonu sood
sonu sood ani

இந்த வீடியோ செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டிருந்தாலும், பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இந்த வீடியோவைப் பார்க்கும் பலரும், “இதைப் பார்த்து கந்தர்வகோட்டை சமஸ்தானமே ஆடிப்போயிருக்கும்” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

திரையில் ஒருவரையொருவர் பழிவாங்கத் துடித்த அருந்ததியும் பசுபதியும் தற்போது இணைந்து ஆட்டம் போடும் இந்த வீடியோ இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

Viral AI video of Pasupathy dancing with Arundhati takes over the web
”மூர்த்தி அண்ணாவுக்கு கார் பார்சல்” - சசிகுமாரின் வைரல் பதிவு!!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com