\
திருப்பதியில் வி.ஐ.பி தரிசனம் ரத்து

திருப்பதியில் வி.ஐ.பி தரிசனம் ரத்து

திருப்பதியில் வி.ஐ.பி தரிசனம் ரத்து
Published on

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொடர் விடுமுறைக் காரணமாக, வி.ஐ.பி தரிசனம் ஜனவரி முதல் வாரம் வரை ரத்து செய்யப்படுகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 23 ஆம் தேதி முதல் ஜனவரி முதல் வாரம் வரை வி.ஐ.பி தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. தொடர் விடுமுறை காரணமாக இந்த தரிசம் ரத்து செய்யப்படுவதாக கோவிலின் இணை செயல் அலுவலர் ஸ்ரீனிவாச ராஜூ தெரிவித்தார்.

மேலும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அதற்கு ஏற்ப லட்டு பிரசாதம் தட்டுபாடு இல்லாமல் கிடைக்க இயந்திரங்கள் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ஜனவரி முதல் விஐபி தரிசனத்திற்கு ஆதார் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவதாக‌வும் அவர் கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com