திருப்பதி கோயிலில் விபிஐகளுக்கான சிறப்பு தரிசனம் ரத்தாகிறதா..?
திருப்பதி திருமலைக் கோயிலில் விஐபிகளுக்கான சிறப்பு தரிசன முறை விரைவில் கைவிடப்படலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
திருப்பதி திருமலை கோயிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இங்கு திருமலை தேவஸ்தானத்தை சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், இதுதவிர முக்கியமான விஐபிக்கள் தரிசனம் செய்ய சிறப்பு வசதி உண்டு. இவர்கள் பக்தர்களோடு பக்தர்களாக கூட்டத்தில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. விரைவில் தரிசனம் செய்ய முடியும்.
இந்நிலையில் இந்த நடைமுறை பாகுபாடு காட்டும் விதமாக உள்ளதாகவும், விஐபிக்கள் தரிசனத்தில் ஊழல்கள் காணப்படுவதாவும் தொடர்ந்து புகார் எழுந்து வந்தது. இந்நிலையில் திருப்பதி திருமலைக் கோயிலில் விரைவில் விஐபி தரிசன முறை கைவிடப்படலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே திருப்பதியில் விஐபிக்களுக்கான சிறப்பு தரிசன முறையை கைவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு வரும் திங்கட்கிழமை ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.