டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் - வழக்குப்பதிவு

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் - வழக்குப்பதிவு

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் - வழக்குப்பதிவு
Published on

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள் வைரலாகின, இது தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

இது தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோக்களில், "ராம், ராம்" கோஷங்களுடன் முஸ்லிம்கள் கொல்லப்படுவார்கள் என்ற கோஷங்களும் எழுப்பப்படுகின்றன. இந்தியாவில் தங்குவதற்கு, ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்ல வேண்டும் என்று கூச்சலிடுகின்றனர். பாராளுமன்றத்திலிருந்து ஒரு கிமீ தொலைவில் உள்ள நாட்டின் முக்கிய போராட்ட தளங்களில் ஒன்றான ஜந்தர் மந்தரில் நடந்த பேரணியில் இந்த கோஷம் எழுப்பியுள்ளன.

உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும், டெல்லி பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளருமான அஷ்வனி உபாத்யாய், ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டத்தின் போது இந்த முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆனால், அவர் இந்த வீடியோக்கள் பற்றி எனக்கு தெரியாது என்றும், அத்தகைய கோஷங்களை எழுப்பியிருக்கக் கூடாது, வீடியோக்களில் காணக்கூடியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். வகுப்புவாத வெறுப்பு பேச்சுக்கு பெயர் பெற்ற சாமியார் நரசிங்கானந்த் சரஸ்வதி முன்னிலையில் இந்த கோஷங்கள் முழங்கப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் தொலைக்காட்சி நடிகரும், பாஜக தலைவருமான கஜேந்திர சவுகானும் பங்கேற்றார்.

இச்சம்பவம் தொடர்பாக  அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், வீடியோவில் இருப்பவர்களை அடையாளம் காண முயற்சிப்பதாகவும் டெல்லி காவல்துறை கூறியது. இந்த அணிவகுப்பு பழைய காலனித்துவ கால சட்டங்களுக்கு எதிராக ஏற்பாடு செய்யப்பட்டது. கோவிட் விதிகள் காரணமாக இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்ததாக போலீசார் கூறுகின்றனர், ஆனால் பெரிய அளவில் கூட்டம் கூடியது.

இந்த சம்பவம் பற்றி இன்று நாடாளுமன்றத்தில் பேசிய ஏஐஎம்ஐஎம் எம்பி அசாதுதீன் ஓவைசி, "பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்திற்கு அருகிலேயே முஸ்லிம்களுக்கு எதிராக "இனப்படுகொலை முழக்கங்கள்" எழுப்பப்பட்டன. இந்த குண்டர்களின் தைரியத்திற்கான ரகசியம் என்ன? மோடி அரசு அவர்களுடன் நிற்கிறது என்பதுதான். ஜூலை 24 அன்று, தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு டெல்லி காவல்துறைக்கு யாரையும் தடுத்து நிறுத்தும் உரிமையை வழங்கியது. ஆனாலும் டெல்லி காவல்துறை அமைதியாக அந்தக் காட்சியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறதுஎன்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com