’சிலர் வன்முறைக்கு திட்டமிடுவதால் உபியில் மறியல் கிடையாது’ பாரதிய கிசான் யூனியன் தலைவர்

’சிலர் வன்முறைக்கு திட்டமிடுவதால் உபியில் மறியல் கிடையாது’ பாரதிய கிசான் யூனியன் தலைவர்

’சிலர் வன்முறைக்கு திட்டமிடுவதால் உபியில் மறியல் கிடையாது’ பாரதிய கிசான் யூனியன் தலைவர்
Published on

உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் சிலர் வன்முறையை பரப்ப முயற்சி செய்கிறார்கள் என்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன, எனவே இப்பகுதிகளில் நாளை சாலை முற்றுகை இருக்காது என்று பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் டிக்கைட் தெரிவித்தார்.

இதுபற்றி பேசிய பாரதிய கிசான் யூனியனின் தலைவர் ராகேஷ் டிக்கைட் “உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் நாளை சாலை முற்றுகை இருக்காது. இந்த இடங்களில் சிலர் வன்முறையை பரப்ப முயற்சித்திருப்பார்கள் என்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. எனவே உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் சாலைகளைத் தடுக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம். டெல்லியைத் தவிர நாட்டின் பிற பகுதிகளில் சாலைகள் தடுக்கப்படும்.

காரணம், அவர்கள் எந்த நேரத்திலும் டெல்லிக்கு அழைக்கப்படலாம், எனவே அவர்கள் காத்திருப்பு நிலையில் வைக்கப்படுகிறார்கள்” என தெரிவித்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com