\
திருமணத்தை மீறிய உறவு : ஆண், பெண்ணை சரமாரியாக தாக்கிய ஊர் மக்கள்

திருமணத்தை மீறிய உறவு : ஆண், பெண்ணை சரமாரியாக தாக்கிய ஊர் மக்கள்

திருமணத்தை மீறிய உறவு : ஆண், பெண்ணை சரமாரியாக தாக்கிய ஊர் மக்கள்
Published on: 

மத்தியப் பிரதேசத்தில் திருமணம் ஆன பெண்ணுடன் தொடர்பு வைத்துக் கொண்ட திருமணமான இளைஞரை ஊர் மக்கள் மரத்தில் கட்டி வைத்து கடுமையாக தாக்கினர்.

மத்தியப் பிரதேச மாநிலம் பிந்த் என்ற பகுதியில் திருமணம் ஆன இளைஞர் ஒருவர் வேறு பகுதியில் இருக்கும் திருமணம் ஆன பெண்ணின் வீட்டுக்கு இரவு நேரத்தில் வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். கணவர் இல்லாத நேரத்தில் அந்தப் பெண்ணும் அந்த இளைஞரும் தனியாக இருந்ததை அருகில் வசித்த பெண்ணின் மாமனார் கண்டுபிடித்தார்.

இந்த நிலையில், ஊர் மக்கள் முன்னிலையில் அவர்கள் இருவரும் கடுமையாக தாக்கப்பட்டனர். இளைஞரை மரத்தில் கட்டி வைத்து சாட்டையால் தாக்கினர். பெண்ணும் ஊர் மக்கள் முன்னிலையில் தாக்கப்பட்டார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com