\
அவையை வழிநடத்த நீங்கள் யார்? அ.தி.மு.க. எம்.பியை கண்டித்த பி.ஜே.குரியன்

அவையை வழிநடத்த நீங்கள் யார்? அ.தி.மு.க. எம்.பியை கண்டித்த பி.ஜே.குரியன்

அவையை வழிநடத்த நீங்கள் யார்? அ.தி.மு.க. எம்.பியை கண்டித்த பி.ஜே.குரியன்
Published on: 

அவையை இப்படி வழிநடத்த நீங்கள் யார் என அ.தி.மு.க. பெண் எம்.பி. விஜிலா சத்யானந்தை, மாநிலங்களவைத் துணைத் தலைவர் பி.ஜே.குரியன் கோபத்துடன் கண்டித்தார்.

ஜெயலலிதா மரணம் குறித்து மைத்ரேயன் எம்.பி., பேசும் போது, அ.தி.மு.க எம்.பி. விஜிலா சத்யானந்த் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினார். இதனால் கோபமடைந்த அவை துணைத் தலைவர் பி.ஜே.குரியன், உறுப்பினர் என்ன பேசுகிறார் என்று கேட்க முடியாத அளவுக்கு இப்படி கூச்சல் போடுவது சரியல்ல என்றும், இருக்கையில் அமருமாறும் கண்டித்தார். ஆனாலும் அவர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், மேலும் கோபமுற்ற குரியன், அவையில் இப்படி நடந்து கொள்வதற்கு உங்களுக்கு அதிகாரமளித்தது யார்? அவையை இப்படி வழிநடத்த நீங்கள் யார்? என்று விஜிலாவை கண்டித்தார். நீங்கள் என் தங்கையை போன்‌றவர் என்பதால், தயவு செய்து இடையூறு ஏற்படுத்தாமல் அமருங்கள் என்று குரியன் கேட்டுக் கொண்டார். பெண் எம்.பி.யாக இருப்பதால் நடவடிக்கை எடுக்காமல் விட்டிருக்கிறேன். இதுவே ஆண் உறுப்பினராக இருந்தால் நடவடிக்கை எடுத்திருப்பேன் என்றும் குரியன் கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com