பாஜகவில் இணைகிறார் நடிகை விஜயசாந்தி

பாஜகவில் இணைகிறார் நடிகை விஜயசாந்தி

பாஜகவில் இணைகிறார் நடிகை விஜயசாந்தி
Published on

பிரபல நடிகை விஜயசாந்தி, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாக அவருடன் பாஜக தேசிய செயலாளர் முரளிதர ராவ் மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் பேசி வந்தனர். பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும் அக்டோபர் 8 ஆம் தேதி அவர் பாஜகவில் இணைவார் என்றும் கூறப்படுகிறது. இதை அவரது ஆதரவாளர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மகாராஷ்ட்ர மாநிலத்திலும் நன்கு அறிமுகமாகியுள்ள விஜயசாந்தியை, அம்மாநில தேர்தலில் நட்சத்திர பேச்சாளராகக் களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

தமிழில், கல்லுக்குள் ஈரம், நெற்றிக்கண், மன்னன், வைஜெயந்தி ஐ.பி.எஸ் உட்பட பல படங்களில் நடித்தவர் விஜயசாந்தி. தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருந்தார். இந்தி, கன்னடம் உட்பட பல்வேறு மொழிகளில் நடித்த அவர், லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டார். 

முன்னணி நடிகையாக இருந்துவந்த விஜயசாந்தி, 1998 ஆம் ஆண்டு பாஜகவில் சேர்ந்தார். பாஜக மகளிர் பிரிவு செயலாளராக இருந்த அவர் பின்னர், தள்ளி தெலங்கானா என்ற கட்சியை ஆரம்பித்தார். அந்தக் கட்சியை பிறகு சந்திரசேகர் ராவ் தலைமை யிலான தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியுடன் இணைத்தார்.

நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த விஜயசாந்தி, 2014 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அந்தக் கட்சியின் நட்சத்திர பேச்சாளராக இருந்த அவர், இப்போது அந்தக் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைய இருக்கிறார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com