பெங்களூர் சிறையில் சசிகலாவை சந்தித்தார் விஜயசாந்தி!
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவை நடிகையும் காங்கிரஸ் கட்சியின், நட்சத்திர பேச்சாளருமான விஜயசாந்தி நேற்று சந்தித்தார்.
நடிகை விஜயசாந்தி, சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு 1998 ஆம் ஆண்டு பாஜகவில் சேர்ந்தார். பின்னர் அக் கட்சியில் இருந்து விலகி, தள்ளி தெலங்கானா என்ற கட்சியை ஆரம்பித்தார். பின் இந்தக் கட்சியை தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவின் ராஷ்ட்ரிய சமிதி கட்சி யில் இணைத்தார். 2009 ஆம் ஆண்டு மேடக் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.ஆனார். கடந்த 2014 ஆம் ஆண்டு அந்தக் கட்சியில் இருந்து வில கி, காங்கிரஸில் இணைந்தார்.
இவர், சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவை நேற்று சந்தித்தார். அவரிடம் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக விஜயசாந்தி பேசிக்கொண்டிருந்தார்.
இந்த சந்திப்பின்போது, காங்கிரஸ் கூட்டணிக்கு அவரது ஆதரவைக் கேட்டதாகக் கூறப்படுகிறது. கட்சியினருடன் கலந்து ஆலோசித்துவிட்டு பதில் சொல்வதாக சசிகலா கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நடராஜன் மறைந்தபோதும் சசிகலாவைச் சந்தித்து ஆறுதல் கூறியிருந்தார் விஜயசாந்தி. அதோடு, ஆர்.கே.நகரில் இடைத்தேர்தலில் டிடிவி.தினகரனை ஆதரித்து பிரசாரமும் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.