\
'எந்த தொகுதியிலும் நிற்கத் தயார்..' விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்

'எந்த தொகுதியிலும் நிற்கத் தயார்..' விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்

'எந்த தொகுதியிலும் நிற்கத் தயார்..' விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்
Published on

தேமுதிக சார்பில் தேர்தலில் போட்டியிட அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் விருப்ப மனு அளித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் கட்சித் தலைமை விருப்ப மனு பெற்று வருகிறது. தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா, முதல்முறையாக தேர்தலில் களம் காண்பதற்காக நேற்று விருப்ப மனு வழங்கினார். தொகுதியின் பெயரைக் குறிப்பிடாமல் அவர், விருப்ப மனுவை அளித்தார். இதைத் தொடர்ந்து, விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனும் விருப்ப மனு அளித்துள்ளார். அவரும் தொகுதியின் பெயரைச் சுட்டிக்காட்டிக் குறிப்பிடாமல், விருப்ப மனுவை அளித்தார். அவருக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேமுதிக தலைமை எந்தத் தொகுதியில் நிற்கச் சொன்னாலும் போட்டியிட உள்ளதாகவும், கட்சித் தொண்டர்கள் தம்மை வெற்றி பெற வைப்பார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com