குஜராத்தில் 2வது முறையாக பதவியேற்றார் விஜய் ருபானி

குஜராத்தில் 2வது முறையாக பதவியேற்றார் விஜய் ருபானி

குஜராத்தில் 2வது முறையாக பதவியேற்றார் விஜய் ருபானி
Published on

குஜராத் முதலமைச்சராக விஜய் ருபானி இன்று இரண்டாவது முறையாக பதவியேற்றுக் கொண்டார்.

குஜராத்தில் நடந்‌த சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா 99 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. விஜய் ருபானி மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து தலைநகர் காந்தி நகரில் புதிய அரசின் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. முதல்வராக விஜய் ருபானியும், துணை முதல்வராக நிதின் படேலும் பதவியேற்றுக் கொ‌ண்ட‌னர். ஆளுநர் ஓ.பி.கோலி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இவ்விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித் ஷா, மூத்த தலைவர் அத்வானி, பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த 18 முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com