இந்தியாவிடம் அரிசியை வாங்கும் நிலைக்கு சரிந்த வியட்நாம் - பின்னணி குறித்து விரிவான அலசல்

இந்தியாவிடம் அரிசியை வாங்கும் நிலைக்கு சரிந்த வியட்நாம் - பின்னணி குறித்து விரிவான அலசல்
இந்தியாவிடம் அரிசியை வாங்கும் நிலைக்கு சரிந்த வியட்நாம் - பின்னணி குறித்து விரிவான அலசல்

உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதி செய்யும் நாடான வியட்நாம், இந்த ஆண்டு இந்தியாவிலிருந்து அரிசியை வாங்க தொடங்கியுள்ளது என்று தொழில்துறை தகவல்கள் தெரிவிக்கிறது.

உலகின் மூன்றாவது பெரிய அரிசி ஏற்றுமதியாளரான வியட்நாம், உள்நாட்டு அரிசி விலையேற்றம் மற்றும் ஒன்பது ஆண்டுகளில் மிக உயர்ந்த உள்நாட்டு விநியோகம் காரணமாக, முதல் முறையாக இந்தியாவிடமிருந்து அரிசியை  வாங்கத் தொடங்கியுள்ளதாக தொழில்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த அரிசி வாங்குதல் ஆசியாவில் இறுக்கமான  தானிய உற்பத்தி சூழலை எடுத்துக்காட்டுகின்றன, இதனால் 2021 ஆம் ஆண்டில் அரிசி விலை உயரக்கூடும், மேலும் இது தாய்லாந்து மற்றும் வியட்நாமில் இருந்து பாரம்பரியமாக அரிசி வாங்குபவர்களை இந்தியாவிடமிருந்து வாங்கவைக்கும் சூழலையும் உருவாக்கியுள்ளது.  

இந்திய வர்த்தகர்கள் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு 70,000 டன் 100% உடைந்த அரிசியை ஒரு டன்னுக்கு 310 டாலர் விலையில் இலவச போக்குவரத்து செலவு (FOB) அடிப்படையில் ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் செய்துள்ளதாக தொழில்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். "நாங்கள் முதன்முறையாக வியட்நாமுக்கு ஏற்றுமதி செய்கிறோம்" என்று நெல் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பி.வி.கிருஷ்ண ராவ் தெரிவித்தார்.

"இந்திய விலைகள் மிகவும் கவர்ச்சிகரமானவை. மற்ற நாடுகளுடன் இருக்கும் மிகப்பெரிய விலை வேறுபாடு இந்த ஏற்றுமதியை சாத்தியமாக்குகிறது. " வியட்நாமின் 5% உடைந்த அரிசி ஒரு டன்னுக்கு $ 500- $ 505 வரை வழங்கப்படுகிறது, இதன் இந்திய விலைகள் $ 381- $ 387 மட்டுமே ஆகும்.

சுருங்கிவரும் பொருட்கள் உற்பத்தியால் துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் உணவுப் பாதுகாப்பின்மை குறித்த கவலைகளும் அதிகரிக்கும், மக்கள்தொகை வளர்ச்சியின் காரணமாக இறக்குமதி தேவை அதிகரித்து வருகிறது. இதனால் கடுமையான உணவுப்பஞ்சமும் அதிகரித்து வருகிறது, கிட்டத்தட்ட ஒவ்வொரு நாட்டிலும் பசியால் அதிகளவிலான குடும்பங்கள் பாதிக்கிறது, கோவிட்-19 தொற்றுநோய் வருமானங்களைக் குறைத்து, விநியோகச் சங்கிலிகளை சீர்குலைக்கிறது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

உலகளாவிய தொற்றுநோய் வியட்நாம் மற்றும் பிற நாடுகளையும் அரிசி கையிருப்பு வைக்க தூண்டியுள்ளது என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர். உலகெங்கிலும் கொரோனா வைரஸால் இயக்கப்படும் விநியோகச் சங்கிலி இடையூறுகளுக்கு மத்தியில் உணவு கிடைப்பதை உறுதி செய்வதற்காக 270,000 டன் அரிசியை சேமித்து வைப்பதாக வியட்நாம் கடந்த ஆண்டு அறிவித்தது.

வியட்நாமில் வர்த்தகர்கள், இந்தியாவில் இருந்து அரிசி 2016/17 முதல் அரசாங்க இருப்புக்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், ஒப்பீட்டளவில் அதன் மலிவான விலை குறைந்த தரத்தை பிரதிபலிப்பதாகவும் தெரிவித்தனர். "அரிசி தரம் மிகவும் மோசமாக உள்ளது, இது மனிதர்களுக்கு நேரடி நுகர்வுக்கு நல்லதல்ல, ஆனால் விலங்குகளின் தீவனம் மற்றும் பீர் தயாரிப்பதற்கு மட்டுமே" என்று ஹோ சி மின் நகரத்தைச் சேர்ந்த ஒரு அரிசி வர்த்தகர் கூறினார்.

2020 ஆம் ஆண்டில் வியட்நாமின் மொத்த நெல் உற்பத்தி 1.85% குறைந்து 42.69 மில்லியன் டன்னாக இருந்தது, இது சுமார் 21.35 மில்லியன் டன் அரிசிக்கு சமம் என்று அரசாங்கத்தின் பொது புள்ளிவிவர அலுவலகத்தின் ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன. 2020 ஆம் ஆண்டில் நாட்டின் அரிசி ஏற்றுமதி 3.5% குறைந்து 6.15 மில்லியன் டன்னாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளின் அதிகமான அரிசி தேவை இந்திய விலையை உயர்த்திக் கொண்டிருக்கிறது, ஆனால் நம்மிடம் போதுமான இருப்பு உள்ளதன் காரணமாக இன்னும் போட்டித்தன்மையுடன் உள்ளன என்று இந்தியாவின் அரிசி வணிகத்தின் துணைத் தலைவர் நிதின் குப்தா கூறினார். விலை வேறுபாடு இருக்கும் வரை வியட்நாம், இந்தியாவிலிருந்து அதிகமாக அரிசி கொள்முதல் செய்ய வாய்ப்புள்ளது என்று குப்தா கூறினார்.

கடந்த டிசம்பரில், உலகின் மிகப்பெரிய அரிசி இறக்குமதியாளர் சீனா முப்பது ஆண்டுகளில் முதல் முறையாக இந்திய அரிசியை வாங்கத் தொடங்கியது. 2020 ஆம் ஆண்டில் இந்தியா 14 மில்லியன் டன் அரிசியை ஏற்றுமதி செய்தது என்று வர்த்தக அமைச்சகத்தின் தற்காலிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com