இந்தியா
இடைவிடாத அசத்தல் பல்டி: 7 மில்லியன் பார்வையாளர்களை கடந்த வீடியோ.!
இடைவிடாத அசத்தல் பல்டி: 7 மில்லியன் பார்வையாளர்களை கடந்த வீடியோ.!
அசத்தல் பல்டி மூலம் இன்ஸ்டாவில் 7 மில்லியன் பார்வையாளர்களை ஜிம்னாஸ்டிக் செய்பவர் பெற்றுள்ளார். அவரது திறமைக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்
இன்ஸ்டாவில் பலரும் வீடியோக்களை பகிர்வார்கள். அதில் சில வீடியோக்கள் அதிக ரசிகர்களை கவர்ந்து வைரலாகிவிடும். அப்படி ஜிம்னாஸ்டிக் செய்யும் விக்ரம் செல்வம் என்பவரது வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் பகிர்ந்த வீடியோவை 7 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர்.
அந்த வீடியோவில் அவர் பல்டி அடிக்கிறார். அது சாதாரணமாக இல்லாமல், பின்புறமாக தொடர்ந்து பல்டி அடித்த வண்ணம் செல்கிறார். நின்று கொண்டே பல்டி அடித்தல் போன்ற சில பல்டிகளையும் அவர் பதிவிட்டுள்ளார்.
இது பாராட்டுக்குரியது என்றும், இவரைப் போன்ற திறமைசாலிகளை ஊக்குவிக்க வேண்டுமென்றும் பலரும் கருத்து பதிவிட்டுள்ளனர்

