காவல் அதிகாரிக்கு முன் தரையைக் கழுவிய சிறுமி - ஆவேசமான ஆந்திர டிஜிபி

காவல் அதிகாரிக்கு முன் தரையைக் கழுவிய சிறுமி - ஆவேசமான ஆந்திர டிஜிபி
காவல் அதிகாரிக்கு முன் தரையைக் கழுவிய சிறுமி - ஆவேசமான ஆந்திர டிஜிபி

ஆறு வயது சிறுமி காவல் ஆய்வாளர் ஒருவரின் முன்பு தரையைச் சுத்தம் செய்வது போன்ற வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


நெல்லூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் கல்லூரியில் உள்ள இடைநிலை மதிப்பிட்டு மையத்தில் இந்தச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பான வீடியோ அப்பகுதியில் செயல்பட்டு வரும் செய்தி தொலைக்காட்சிகளில் வெளியாக, அது நேரடியாக ஆந்திர மாநிலம் டி.ஜி.பி கௌதம் சுவாங், பார்வைக்குச் சென்றுள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் குழந்தை தரையைச் சுத்தப்படுத்தும் போது அருகில் நின்று கொண்டிருந்த தலைமைக் காவல் அதிகாரி மீது நடவடிக்கை உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து மாவட்ட காவலர்கள் கூறும் போது “ அந்தச் சிறுமி கல்லூரியில் காவலாளியாக பணிபுரிந்து வந்த கிருஷ்ண பிராசத்தின் மகள். கிருஷ்ணாவுக்குத் திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ளனர். தந்தை நாள்பட்ட நோயால் அவதிப்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அன்றைய தினம் பிரசாத்தின் மனைவிதான் தரையைச் சுத்தம் செய்திருக்க வேண்டும். ஆனால் அவர் பால் கொதிக்கிறது என அவசரமாகச் சென்றுள்ளார்.

அப்போதுதான் சிறுமி தானே முன்வந்து தரையைத் துடைத்துள்ளார். இதில் காவல் அதிகாரிகளுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை. குழந்தை தரையைத் துடைக்கும் போது அதிகாரிகள் பலர் உடனிருந்தனர். இருப்பினும் விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர்கள் கூறினர்.

இது குறித்து டி.ஜி.பி சுவாங் கூறும் போது “ குழந்தை தொழிலாளர்கள் குறித்து எவ்வளவோ விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட போதும், காவல் துறையினரின் முன்னால் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது துரதிருஷ்டவசமானது. இது போன்ற சம்பவங்களை நான் ஒரு போதும் பொறுத்துக்கொள்ள மாட்டேன்” எனக் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com