திடீரெனஅறுந்த ஜிப்லைன் பெல்ட் தலைகீழாக விழுந்த இளம்பெண் பதற வைக்கும் வீடியோ காட்சி!
ஜிப் லைனில் சென்றுகொண்டிருந்த போது திடீரென கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து இளம்பெண் ஒருவர் கீழே விழும் வீடியோ காட்சி வெளியாகி காண்போரை பதைபதைக்க வைத்துள்ளது..
ஹிமாச்சலப்பிரதேசத்தில் உள்ள மணாலி புகழ்பெற்ற சுற்றுலா தளம். இங்கு நாள்தோறும் பல்வேறு நாடுகளில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏரளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்..
அதே போல நாக்பூர் பகுதியைச் சேர்ந்த பிரபுல்லா பிஜ்வே என்ற நபர் தனது குடும்பத்துடன் மணாலியை சுற்றி பார்க்க வந்துள்ளார். அப்போது அங்குள்ள ஜிப்லைனில் போக வேண்டும் என அவரது மகள் த்ரிஷா பிஜ்வே கேட்டுள்ளார். மகளின் ஆசையை நிறைவேற்ற நினைத்த பிரபுல்லா பிஜ்வே ஜிப்லைனில் பயணிக்க அனுமதித்துள்ளார்.
பாதுகாப்பு ரோப்கள் அனைத்தும் பொருத்தப்பட்ட நிலையில் ஜிப்லைனில் பாதி தூரம் கடந்து சென்றார் த்ரிஷா பிஜ்வே..அப்போது திடீரென ஜிப்லைன் கயிறு அறுந்ததில், 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்த நபர்கள் மீட்டு, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஜிப்லைனில் அறுந்து இளம்பெண் கீழே விழும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைராகி காண்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.