இந்தியா
பாஜக குடியரசுத் துணைத்தலைவர் வேட்பாளர் வெங்கய்ய நாயுடு
பாஜக குடியரசுத் துணைத்தலைவர் வேட்பாளர் வெங்கய்ய நாயுடு
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளராக வெங்கய்ய நாயுடு அறிவிக்கப்பட்டார்.
எதிர்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளராக காந்தியின் பேரன் கோபால கிருஷ்ணகாந்தி அறிவிக்கப்பட்ட நிலையில், பாஜக வேட்பாளரை முடிவு செய்யும் ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தின் முடிவில் துணைக்குடியரசுத் தலைவர் வேட்பாளராக வெங்கய்ய நாயுடு அறிவிக்கப்பட்டார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில், தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சராக வெங்கய்ய நாயுடு பதவி வகித்து வருகிறார். தற்போதைய துணைக் குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 19ல் நிறைவடைய உள்ள நிலையில், அந்த பதவிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5ல் நடைபெறுகிறது.