ஜெகதீப் தன்கர்pt web
இந்தியா
நாடாளுமன்ற கூட்டத் தொடர் முதல்நாள்.. குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் திடீர் ராஜினாமா!
குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் மருத்துவக் காரணங்களுக்காக திங்கள் கிழமை (21/07/25) ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியிருக்கிறார்.
குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமா
தனது ராஜினாமா கடிதத்தில், “மருத்துவர்களின் அறிவுரையின் படி, இந்திய அரசியலமைப்பின் பிரிவு 67(ஏ) இன் படி, எனது பதவியை ராஜினாமா செய்யும் முடிவை எடுத்துள்ளேன். ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். ஜனாதிபதியின் அசைக்க முடியாத ஆதரவிற்கும், அவர்கள் பகிர்ந்து கொண்ட நல்லுறவுக்கும் நன்றி” எனத் தெரிவித்திருக்கிறார்.