இந்திய கடற்படையின் புதிய தளபதிமுகநூல்
இந்தியா
இந்திய கடற்படையின் புதிய தளபதி நியமனம்
இந்திய கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அட்மிரல் தினேஷ்குமார் திரிபாதி பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது
இந்திய கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அட்மிரல் தினேஷ்குமார் திரிபாதி பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது கடற்படையின் தளபதியாக உள்ள அட்மிரல் ஆர். ஹரி குமாரின் பதவிக்காலம் வரும் ஏப்ரம் 30ஆம் தேதியுடன் நிறைவடைந்த பின்னர் தினேஷ் குமார் திரிபாதி பதவியேற்றுக்கொள்வார். தற்போது கடற்படையின் துணை தளபதியாக உள்ள தினேஷ்குமார் திரிபாதி பணி மூப்பு அடிப்படையில் கப்பற்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
வைஸ் அட்மிரல் கிருஷ்ண சுவாமிநாதன் அடுத்த துணை தளபதியாக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 1964ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி பிறந்த தினேஷ்குமார் திரிபாதி கப்பற்படையில் 1985ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இணைந்தார்.
பல்கலை மாணவி கத்தியால் குத்தி படுகொலை.. லவ் ஜிஹாத் பெயரில் அரசியல் அலை! கர்நாடகாவை பதறவைத்த சம்பவம்!
சுமார் 30 ஆண்டு அனுபவம் வாய்ந்த தினேஷ் குமார் திரிபாதி கடற்படையில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.